நம்ம ஊர் நம்ம செய்திகள்....
ஜமாபந்தி) துவக்க விழா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஜமாபந்தி நிகழ்வை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் டி.எஸ். வேலு, வருவாய் வட்டாட்சியர் முருகன், வருவாய்த் துறை அலுவலர்கள், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 1435-ஆம் பசலிக்கான ஜமாபந்தி நிகழ்வுகள் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன
Adm🙃n
6/18/20261 நிமிடங்கள் வாசிக்கவும்
